குஜராத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

2 நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்ற பிரதமர் மோடி பல்வேறு நலதிட்டங்களை தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றார்.
முதல் கட்டமாக, இன்று அகமதாபாத் செல்லும் பிரதமர் மோடி, அங்கு மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டடினார். மேலும், தொழிலாளர் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், சவ்னி நீர் திட்டம், அரசு மருத்துவமனை திறப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதேபோல், நாளை 5ம் தேதி மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என பிரதமரின் சுற்றுப்பயணம் தொடர்பான நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி பிரதமராவதற்கு முன்னர், குஜராத் மாநில முதலமைச்சராக 2001-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story