பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கிய 7 பேரின் சொத்துகள் அமலாக்கத்துறை கையகப்படுத்தியது
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி சையது சலாவுதீன் தலைமையிலான ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்துக்கு நிதி உதவி செய்த 7 பேரின் 13 சொத்துகளை அமலாக்கத்துறை கையகப்படுத்தியது. அதன் மதிப்பு ரூ.1.22 கோடி.
புதுடெல்லி,
காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா பகுதியை சேர்ந்த முகமது ஷபிஷா உள்பட 7 பேரின் சொத்துகள் கையகப்படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் நிதியுதவி செய்துவருகிறது. ஐ.எஸ். மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுக்கும் மறைமுகமாக நிதி உதவி செய்யும் ஒரு அறக்கட்டளை மூலம் இந்த நிதி அனுப்பப்படுகிறது என குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
முகமது ஷபிஷா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story