சாய்வாலா இப்போது சவுக்கிதார் என கூறி மக்களை முட்டாளாக்கி வருகிறார்: மோடி மீது மம்தா கடும் விமர்சனம்
சாய்வாலா (டீக்கடைக்காரர்) இப்போது சவுக்கிதார் (காவலாளி) என்று பிரசாரத்தை மாற்றிக்கொண்டு பிரதமர் மோடி மக்களை முட்டாளாக்கி வருகிறார் என மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
புதுடெல்லி,
மேற்கு வங்கம் கொல்கத்தாவிலிருந்து 683 கி.மீ. தொலைவில் நேபாளம், பூட்டான் அருகே உள்ள கூச் பெஹர் என்ற இடத்தில் இன்று பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட மாநில முதல்-மந்திரியும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதாவது:
வங்கதேசத்துடனான அறுபது ஆண்டு பிரச்சினைக்கு 2015-ல் திரிணாமூல் காங்கிரஸ் தீர்வு கண்டது. ஆனால் சட்டப்பூர்வ குடிமக்களானவர்களை எல்லாம் அகதிகளாக மாற்றுவதற்கு பாஜக ஒரு குடிமக்கள் திருத்த மசோதாவைக் கொண்டு வந்தது.
நாங்கள் ஒருபோதும் என்ஆர்சியை அனுமதிக்க மாட்டோம். யார் நாட்டில் இருக்க வேண்டும்? யார் வெளியேற வேண்டும் என்று மோடி ஒருவர் தீர்மானிக்க முடியாது. குடியுரிமை சட்டம் என்பது இந்த நாட்டின் சட்டப்பூர்வ குடிமக்களை அகதிகளாக மாற்றுவதற்கான மற்றொரு சதி. பாஜகவின் இந்த சதித் திட்டம் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்.
2014 மக்களவைத் தேர்தலில் வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கி கணக்கிற்கு ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என
அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்த சாய்வாலா (டீக்கடைக்காரர்) இப்போது சவுக்கிதார் (காவலாளி) என்று பிரசாரத்தை மாற்றிக்கொண்டு மக்களை முட்டாளாக்கி வருகிறார்''. இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.
Related Tags :
Next Story