பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்குவந்தால் சில அதிகாரிகள் வேலையைவிட்டு செல்லலாம் என தகவல்


பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்குவந்தால் சில அதிகாரிகள் வேலையைவிட்டு செல்லலாம் என தகவல்
x
தினத்தந்தி 10 April 2019 7:36 PM IST (Updated: 10 April 2019 9:44 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்குவந்தால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து சில அதிகாரிகள் வேலையைவிட்டு செல்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி மே மாதம் இரண்டாவது முறையாக ஆட்சிக்குவந்தால், குடிமை சேவை பணியில் உயர்மட்ட அளவில் முக்கிய மாற்றங்கள் நிகழலாம் என நிர்வாகத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடியின் அலுவலகத்தில் பணியாற்றும் 8 உயர் அதிகாரிகள் தங்களை இடமாற்றம் செய்யக் கோரிக்கை விடுக்கலாம் அல்லது பணி காலம் முடிவதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்துவிட்டு செல்லலாம் என அரசு அதிகாரிகள் தரப்பு தகவல் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் இதனை கூறியுள்ளனர், அவர்கள் இவ்விவகாரம் மிகவும் முக்கியமான விஷயம் என்பதால் தங்களுடைய அடையாளத்தை வெளியே தெரிவிக்க விரும்பவில்லை.

பல்வேறு அமைச்சகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் இடமாற்றத்தை விரும்புவதாகவும், சிலர் பிரதமர் மோடியின் பணியாற்றும் முறையில் திருப்தி அடையவில்லை எனவும் கூறப்படுகிறது.

Next Story