நாடாளுமன்ற சபாநாயகர் போட்டியில் முன்னிலை வகிக்கும் மேனகா காந்தி

நாடாளுமன்ற சபாநாயகர் போட்டியில் முன்னாள் மத்திய மந்திரி மேனகா காந்தி முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசை அமைத்துள்ளது. இதைத்தொடர்ந்து 17-வது மக்களவையின் சபாநாயகர் யார்? என்ற எதிர்பார்ப்பு மத்திய அரசு வட்டாரங்களில் அதிகமாக காணப்படுகிறது. இந்த பதவிக்கு சரியான நபரை தேர்வு செய்யும் பணியில் பா.ஜனதா தலைமை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.
இதில் முன்னாள் மத்திய மந்திரி மேனகா காந்தி முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இவரை தவிர முன்னாள் மத்திய மந்திரிகள் ராதாமோகன் சிங், ஜூவல் ஓரம், எஸ்.எஸ்.அலுவாலியா மற்றும் விரேந்தர் குமார் எம்.பி. உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபடுகின்றன.
Related Tags :
Next Story