6 நாட்களை கடந்த பின்னரும் மாயமான விமானம் குறித்து எந்த தகவலும் இல்லை - விமானப்படை தளபதி நேரில் ஆய்வு
6 நாட்களை கடந்த பின்னரும் மாயமான விமானம் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் விமானப்படை தளபதி நேரில் ஆய்வு நடத்தினார்.
இடாநகர்,
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந்தேதி, 13 பேருடன் அசாமில் இருந்து அருணாசல பிரதேசத்துக்கு புறப்பட்டது. அது கிளம்பிய ½ மணி நேரத்தில் அருணாசல பிரதேசத்தில் சீன எல்லையோரம் மாயமானது. இந்த விமானத்தை தேடும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
இந்த தேடும் பணிகளில் விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு உள்ளன. இதைப்போல ராணுவம், இந்தோ-திபெத் படையினர் மற்றும் மாநில போலீசார், உள்ளூர் மக்களுடன் இணைந்து அருணாசல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தை மையமாக கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த பணிகள் நேற்று 6-வது நாளை எட்டிய போதும், மாயமான விமானம் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. எனவே தேடும் பணிகளில் கூடுதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் மாயமான விமானம் புறப்பட்ட ஜோர்காட் விமானப்படை தளத்துக்கு விமானப்படை தளபதி தனோவா நேற்று சென்றார். அங்கு அவர் விமானத்தை தேடும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் தேடும் பணிகள் மற்றும் கள நிலவரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் அவர் அந்த விமானத்தில் பயணம் செய்த அதிகாரிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Related Tags :
Next Story