கர்நாடகாவில் நடைபெறும் சம்பவங்களில் எங்களுக்கு தொடர்பில்லை - ராஜ்நாத் சிங்

கர்நாடகாவில் நடைபெறும் சம்பவங்களில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லையென மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா காரணமாக குழப்பம் நீடித்து வருவதால், குமாரசாமி அரசை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே அமைச்சர்களும் மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். பா.ஜனதாவின் சதி காரணமாகவே எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர் என குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் அதிர் ராஜன் சவுதாரி பேசுகையில், கர்நாடகம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கலைக்க மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு சதித்திட்டம் தீட்டுகிறது என குற்றம் சாட்டினார்.
நீங்கள் 303 தொகுதிகளில் வென்றீர்கள், ஆனாலும் உங்களுடைய வயிறு நிறையவில்லை. உங்களுடைய வயிறும், டெல்லி கேட்டும் ஒன்றுதான் என பா.ஜனதாவை சாடினார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடகாவில் இப்போது நடைபெறும் சம்பவங்களில் எங்களுக்கு எந்தஒரு தொடர்பும் கிடையாது என கூறினார்.
Related Tags :
Next Story