உன்னாவ் சிறுமி கற்பழிப்பு வழக்கில் சிக்கிய எம்.எல்.ஏ.வின் துப்பாக்கி லைசென்சு ரத்து

உன்னாவ் சிறுமி கற்பழிப்பு வழக்கில் சிக்கிய எம்.எல்.ஏ.வின் துப்பாக்கி லைசென்சு ரத்து செய்யப்பட்டது.
உன்னாவ்,
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் சிறுமியை கற்பழித்த வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். சமீபத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்தில் சிக்கியதில் அவரது உறவுப்பெண்கள் 2 பேர் பலியானார்கள். அந்த சிறுமி காயம் அடைந்தார். இதுதொடர்பாகவும் குல்தீப் செங்கார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குல்தீப் ஒரு கைத்துப்பாக்கி உள்பட 3 துப்பாக்கிகள் உரிய அனுமதியுடன் வைத்திருந்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் கூறியதைத் தொடர்ந்து உன்னாவ் மாவட்ட கலெக்டர், குல்தீப் செங்காரின் 3 துப்பாக்கிகளுக்கான லைசென்சுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story