ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து: அதிமுக, பிஜூ ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சிகள் ஆதரவு

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து மசோதாவுக்கு அதிமுக, பிஜூ ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35 ஏ சட்டப்பிரிவு ரத்து என உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
அதிமுக,பிஜூ ஜனதா தளம்,பகுஜன் சமாஜ் கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
பிஜூ ஜனதா தளம் எம்.பி. பிரசன்னா ஆச்சார்யா: உண்மையான அர்த்தத்தில், இன்று ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இந்த தீர்மானத்தை எனது கட்சி ஆதரிக்கிறது. நாங்கள் ஒரு பிராந்திய கட்சி, ஆனால் எங்களுக்கு நாடு முதலிடம்.
அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்னன் பேசும்போது கூறியதாவது:- ஜம்மு காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் முடிவால் கவலைப்பட தேவை இல்லை. நாட்டின் இறையான்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. எனவே மறுசீரமைப்பு மசோதா மற்றும் இடஒதுக்கீடு மசோதா ஆகிய இரண்டு தீர்மானங்களை அதிமுக கட்சி ஆதரிக்கிறது என கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. சதீஷ் சந்திர மிஸ்ரா பேசும் போது கூறியதாவது:-
இந்த முடிவிற்கு எங்கள் கட்சி முழுமையான ஆதரவை அளிக்கிறது. மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பிரிவு 370 மசோதா மற்றும் பிற மசோதாவுக்கு எங்கள் கட்சி எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என கூறினார்.
Related Tags :
Next Story