கார் விற்பனை குறைவு: 2 நாட்களுக்கு கார் உற்பத்தி தொழிற்சாலைகள் மூடல் -மாருதி நிறுவனம் அறிவிப்பு

கார் விற்பனை குறைந்ததால் 2 நாட்களுக்கு கார் உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்படுவதாக மாருதி நிறுவனம் அறிவித்து உள்ளது.
குருகிராம்,
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கார் விற்பனை குறைந்ததால் செப்டம்பர் 7 மற்றும் 9 ஆம் தேதிகளில் அரியானாவில் உள்ள குருகிராம் மானேசரில் உள்ள தொழிற்சாலையில் கார் உற்பத்தி நடைபெறாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தனது உற்பத்தி சதவிகிதத்தை 33.99 % ஆக குறைத்துள்ளது. கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தில் 1,68,725 வாகனங்களை மாருதி சுசுகி உற்பத்தி செய்திருந்தது. ஆனால், 2019 ஆகஸ்ட்டில் 1,11,370 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பேசஞ்சர் ரக வாகன உற்பத்தியும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாகவே அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மினி மற்றும் காம்பேக்ட் ரக கார்களின் உற்பத்தியும் சரிந்துள்ளது.
Related Tags :
Next Story