நிலவில் தரை இறங்கும்போது தகவல் தொடர்பு துண்டிப்பு: விக்ரம் லேண்டர் கதி என்ன?
நிலவில் தரை இறங்கும்போது விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பு திடீரென்று துண்டிக்கப்பட்டதால், அதன் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. இது சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவு ஆகும்.
பெங்களூரு,
அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற நாடுகளைப்போல் இந்தியாவும் விண்வெளி ஆராய்ச்சியில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.
ஏற்கனவே சந்திரயான்-1 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி ஆய்வு செய்த இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) விஞ்ஞானிகள் அடுத்ததாக சந்திரயான்-2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி, அங்கு தரை இறங்கச் செய்து ஆய்வு நடத்த தீர்மானித்தனர்.
இதற்காக, சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவு தளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பினார்கள். இதற்கான திட்ட செலவு ரூ.978 கோடி ஆகும். ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை கொண்டதுதான் சந்திரயான்-2 விண்கலம்.
முதலில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்த சந்திரயான்-2 விண்கலம் பின்னர் அதில் இருந்து விடுபட்டு நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு சென்றது. அதன்பிறகு அவ்வப்போது சுற்றுவட்ட பாதையின் உயரம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து விண்கலம் படிப் படியாக நிலவை நெருங்கியது.
கடந்த 2-ந் தேதி ஆர்பிட்டரில் இருந்து, பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவை சுற்றி வந்தது. நேற்று முன் தினம் குறைந்தபட்சமாக 35 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 101 கி.மீ. தொலைவிலும் விக்ரம் லேண்டர் நிலவை சுற்றி வந்தது.
நேற்று அதிகாலை 1.54 மணிக்கு லேண்டரை நிலவில் மெதுவாக தரை இறக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர். நிலவின் தென் துருவத்தில் சுமார் 1½ கி.மீ. இடை வெளியில் அமைந்துள்ள மான்சினஸ்-சி, சிம்பிலியஸ்-எஸ் ஆகிய இரு பள்ளங்களுக்கு இடையேயான சமதள பரப்பில் தரை இறக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கை கோள் கட்டுப்பாட்டு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. விக்ரம் லேண்டர் நிலவில் இறங்குவதை பார்ப்பதற்காக அங்கு பிரதமர் மோடி வந்திருந்தார். இஸ்ரோ தலைவர் கே.சிவன், முன்னாள் தலைவர்கள் ஏ.எஸ்.கிரண்குமார், கே.ராதாகிருஷ்ணன், கே.கஸ்தூரிரங்கன் மற்றும் விஞ்ஞானிகள், மாணவர்கள் திரண்டு இருந்தனர். விக்ரம் லேண்டர் தரை இறங்குவதை பார்க்க அவர்கள் மிகவும் ஆவலுடன் காத்து இருந்தனர்.
நிலவில் இருந்து 30 கி.மீ. உயரத்தில் இருந்த போது, லேண்டரை நிலவில் இறக்குவதற்கான சமிக்ஞை அதிகாலை 1.38 மணிக்கு, தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து லேண்டரின் கீழ் பகுதியில் உள்ள 4 என்ஜின்கள் இயங்க தொடங்கின. அந்த என்ஜின்கள் விசையை கீழ்நோக்கி தள்ளியதால் லேண்டர் நிலவின் தரைப்பகுதியை நோக்கி மெதுவாக இறங்கி வந்தது.
இதை பார்த்ததும் தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்த அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தனர். என்றாலும் எல்லோரிடமும் கடைசி நேர பரபரப்பு காணப்பட்டது.
கீழ்நோக்கி வந்து கொண்டிருந்த லேண்டர் திட்டமிட்டபடி 1.54 மணிக்கு நிலவில் குறிப்பிட்ட இடத்தில் தரை இறங்கி இருக்க வேண்டும். ஆனால் நிலவின் தரைப்பகுதிக்கு மேலே 2.1 கி.மீ. உயரத்தில் வந்து கொண்டிருந்த போது துரதிருஷ்டவசமாக, லேண்டருடனான தரை கட்டுப்பாட்டு நிலையத்தின் தொடர்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது.
இதனால் விஞ்ஞானிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த அவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அவர்கள் கடுமையாக போராடியும் பலன் இல்லை. லேண்டரில் ஏதாவது சிறிய பிரச்சினை ஏற்பட்டு இருக்கலாம், நிலைமை உடனடியாக சரியாகிவிடும் என்று பதற்றத்துடன் சற்று நேரம் காத்து இருந்தனர். ஆனால் விடுபட்ட தொடர்பு மீண்டும் கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் பிரதமர் மோடியிடம் சென்று, லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட தகவலை வருத்தத்துடன் தெரிவித்தார்.
பின்னர் அந்த தகவலை அங்கு கூடி இருந்தவர்கள் மத்தியில் அறிவித்தார். அப்போது அவர், “விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவின் தரை பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தது. நிலவுக்கு அருகாமையில் 2.1 கி.மீ. உயரத்தில் வந்து கொண்டிருந்த போது விக்ரம் லேண்டருக்கும், தரை கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் திடீரென்று தொடர்பு துண்டிக்கப்பட்டது” என்று நா தழுதழுக்க கூறினார். விக்ரம் லேண்டரில் இருந்து கடைசியாக கிடைத்த தரவுகளை ஆய்வு செய்து வருவதாகவும் அப்போது அவர் கூறினார்.
அவர் இவ்வாறு கூறியதை கேட்டதும் அங்கிருந்த அனைவரும் சோகத்தில் மூழ்கினார்கள்.
இதைத்தொடர்ந்து, கே.சிவனுக்கும், மற்ற விஞ்ஞானிகளுக்கும் பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
திட்டமிட்டபடி விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கி இருந்தால், சுமார் மூன்று மணி நேரம் கழித்து அதில் இருந்து 6 சக்கரங்களை கொண்ட பிரக்யான் ரோவர் என்ற சிறிய வாகனம் வெளியே வந்து இருக்கும். பின்னர் அது தரைப்பகுதியில் மெதுவாக 500 மீட்டர் ஊர்ந்து சென்று ஆய்வுப்பணியை மேற்கொண்டு இருக்கும்.
ஆனால் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் விக்ரம் லேண்டர் என்ன ஆனது? அதன் உள்ளே இருந்த பிரக்யான் ரோவர் வாகனத்தின் கதி என்ன? என்பது தெரியாமல் உள்ளது. விஞ்ஞானிகள் மனம் தளராமல் லேண்டருடன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.
என்றாலும் இதுபற்றி இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், “லேண்டரில் இருந்து எந்த தகவலும் வராததால் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவது என்பது மிக மிக கடினமான ஒன்று” என்றும் தெரிவித்தார்.
லேண்டரின் கீழ் பகுதியில் உள்ள 4 என்ஜின்கள் இயங்கும் போது எதிர் உந்துவிசை ஏற்படும் என்பதால், நிலவின் தரையை நோக்கி லேண்டர் இறங்கும் வேகம் குறைக்கப்படும். அப்படி மெதுவாக வந்தால்தான் லேண்டர் சேதம் இல்லாமல் அதிர்வு இல்லாமல் இறங்கும்.
2.1 கிலோ மீட்டர் உயரத்தில் வந்து கொண்டிருந்த போது லேண்டரில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு தொடர்பு துண்டிக்கப்பட்டு இருக்கலாம் அல்லது லேண்டரில் உள்ள என்ஜின்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக லேண்டர் வேகமாக கீழ் நோக்கி வந்து நிலவின் தரையில் மோதி நொறுங்கி இருக்கலாம். இல்லையேல் ஏதாவது கோளாறின் காரணமாக லேண்டர் வெடித்துச் சிதறி இருக்கலாம். இதில் எது வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம்.
விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்ட போதிலும், ஆர்பிட்டர் தொடர்ந்து ஓராண்டு காலம் நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்து தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல்களை அனுப்பும். ஆர்பிட்டரில் உள்ள சக்திவாய்ந்த கேமராக்கள் மற்றும் கருவிகள் மூலமாகவும் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர்.
சந்திரயான்-2 திட்டத்தின் பெரும்பகுதி வெற்றி பெற்ற நிலையில், கடைசி கட்டத்தில் லேண்டர் தரை இறங்கும் போது தொடர்பு துண்டிக்கப்பட்டது, பின்னடைவாக கருதப்படுகிறது.
தோல்வி அடைந்த முயற்சிகள்
* நிலவில் விண்கலத்தை தரை இறக்கும் முயற்சிகள் பல ஏற்கனவே தோல்வியில் முடிந்துள்ளன.
* நிலவுக்கு விண்கலத்தை அனுப்புவதற்காக அமெரிக்கா முதன் முதலில் 1958-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது.
* 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந் தேதி அமெரிக்கா நிலவில் மனிதனை தரை இறக்கி சாதனை படைத்தது.
* சந்திரனில் விண்கலத்தை தரை இறக்கும் ரஷியாவின் முயற்சி 1959-ம் ஆண்டு ஜனவரி 4-ந் தேதி வெற்றி பெற்றது. அதற்கு முன்பு அந்த நாடு மேற்கொண்ட 5 முயற்சிகள் தோல்வி அடைந்தன.
* சீனாவும் சந்திரனுக்கு ஆய்வு கருவிகளை அனுப்பி உள்ளது.
* இஸ்ரேல் கடந்த ஏப்ரல் மாதம் நிலவில் கால் பதிக்க முயன்று தோல்வி அடைந்தது.
* சந்திரயான்-2 விண்கலம் மூலம் நிலவில் ஆய்வு வாகனத்தை இறக்கி ஆராய்ச்சி செய்யும் இந்தியாவின் முயற்சி மயிரிழையில் கைகூடாமல் போய் இருக்கிறது.
சந்திரயான்-2 திட்ட செலவு ரூ.978 கோடி
* 2006-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-1 விண்கலம் நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்து தகவல்களை அனுப்பியது.
* நிலவின் தென்துருவ பகுதியில் இறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் செலுத்தப்பட்டது. இதுவரை எந்த நாட்டின் விண்கலமும் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியது இல்லை.
* சந்திரயான்-2 திட்ட செலவு ரூ.978 கோடி.
* சந்திரயான்-2 விண்கலத்துக்கான செலவு ரூ.603 கோடி, அதை அனுப்ப உதவிய ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை தயாரிப்பதற்கான செலவு ரூ.375 கோடி.
நிலவின் தென் துருவபகுதியில் விக்ரம் லேண்டர் தரை இறங்காமல் போய் விட்டது. ஆனால் நிலவின் தரைக்கு மிக அருகே விக்ரம் லேண்டர் சென்றது என்பதுதான் உண்மை. ஆனால் கடைசி நேரத்தில் மாயமாகிவிட்டது.
பூமிக்கும், நிலவுக்குமான தூரம் 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. ஆனால் விக்ரம் லேண்டர் 3 லட்சத்து 83 ஆயிரத்து 998 கி.மீ. வரை பயணித்துவிட்டது. அடையத்தவறிய தூரம் 2.1 கி.மீ. மட்டும்தான்.
அதை சதவீதத்தில் கணக்கிட்டால் அது 0.0006 சதவீதம் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தான் பிரதமர் மோடி, “நாம் மிகவும் நெருங்கி விட்டோம். என்ன, இன்னும் கொஞ்சம் சென்றிருக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.

* சந்திரயான்-2 விண்கலத்தின் எடை 3,840 கிலோ. இதில் விக்ரம் லேண்டரின் எடை மட்டும் 1,471 கிலோ. பிரக்யான் ரோவரின் எடை 27 கிலோ.
கடைசி நேரத்தில் மாயமான ‘விக்ரம் லேண்டர்’
நிலவின் தென் துருவபகுதியில் விக்ரம் லேண்டர் தரை இறங்காமல் போய் விட்டது. ஆனால் நிலவின் தரைக்கு மிக அருகே விக்ரம் லேண்டர் சென்றது என்பதுதான் உண்மை. ஆனால் கடைசி நேரத்தில் மாயமாகிவிட்டது.
பூமிக்கும், நிலவுக்குமான தூரம் 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. ஆனால் விக்ரம் லேண்டர் 3 லட்சத்து 83 ஆயிரத்து 998 கி.மீ. வரை பயணித்துவிட்டது. அடையத்தவறிய தூரம் 2.1 கி.மீ. மட்டும்தான்.
அதை சதவீதத்தில் கணக்கிட்டால் அது 0.0006 சதவீதம் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தான் பிரதமர் மோடி, “நாம் மிகவும் நெருங்கி விட்டோம். என்ன, இன்னும் கொஞ்சம் சென்றிருக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story