அமலாக்கத்துறை முன்பு தானாக சரணடைய முன்வந்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி


அமலாக்கத்துறை முன்பு தானாக சரணடைய முன்வந்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 13 Sept 2019 4:48 PM IST (Updated: 13 Sept 2019 4:48 PM IST)
t-max-icont-min-icon

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை முன்பு தானாக சரணடைய கோரி ப.சிதம்பரம் தொடர்ந்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து கடந்த மாதம் 21-ந் தேதி அவரை சிபிஐ கைது செய்து, தங்கள் காவலில் வைத்து விசாரித்து வந்தது. சிபிஐ காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த 5-ந் தேதியன்று அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில், அமலாக்கத்துறை முன்பு தானாக சரணடைய கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்திருந்தார். ப.சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்து, மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. 

இப்போதைக்கு ப.சிதம்பரத்தை காவலில்  எடுக்க வேண்டிய அவசியத்தில் அமலாக்கத்துறை இல்லை என்ற காரணத்தினால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

குறிப்பாக திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம், தானாகவே சரண் அடைவதன் மூலம் சிறைக்காவலில் இருந்து அவர் தப்பிக்கவே, சரண் அடைய மனு தாக்கல் செய்துள்ளார் என்ற சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Next Story