தேசிய செய்திகள்

நாம் தொடர்ந்து முன்னேறுவோம் - இஸ்ரோ டுவிட் + "||" + We will continue to keep going forward ISRO Tweet

நாம் தொடர்ந்து முன்னேறுவோம் - இஸ்ரோ டுவிட்

நாம் தொடர்ந்து முன்னேறுவோம் - இஸ்ரோ டுவிட்
நாம் தொடர்ந்து முன்னேறுவோம் என்று இஸ்ரோ தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
டெல்லி,

நிலவின் மேற்பரப்பில் செயலிழந்த விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த  சந்திரயான் -2 மிஷன் விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். இஸ்ரோவுடன் சேர்ந்து நாசாவும் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் நாம் தொடர்ந்து முன்னேறுவோம் என இஸ்ரோ தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ தனது டுவிட்டரில், 

எங்களுடன் துணைநிற்பதற்கு நன்றி. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளால் உந்தப்பட்டு நாம் தொடர்ந்து முன்னேறுவோம். என பதிவிட்டுள்ளது.