அமெரிக்கா வாபஸ் பெற்ற இந்தியா முன்னுரிமை வர்த்தக நிலை அளவுகோல்களை பூர்த்தி செய்கிறது- வெளியுறவு செயலாளர்


அமெரிக்கா வாபஸ் பெற்ற இந்தியா முன்னுரிமை வர்த்தக நிலை அளவுகோல்களை பூர்த்தி செய்கிறது- வெளியுறவு செயலாளர்
x

அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக வாபஸ் பெற்ற இந்தியா முன்னுரிமை வர்த்தக நிலை அளவுகோல்களை பூர்த்தி செய்கிறது என வெளியுறவு செயலாளர் கூறினார்.

 புதுடெல்லி,

வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே இன்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்  கூறியதாவது:- 

செப்டம்பர் 21ம் தேதி பிற்பகலில் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். 27ம் தேதி காலையில் தான் அவர் நாடு திரும்ப உள்ளார். டெக்சாசின் ஹூஸ்டன் நகருக்கும், நியூயார்க்கிற்கும் அவர் செல்ல உள்ளார். செப்.22ம் தேதி இந்திய வம்சாவளியினரின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதில் அதிபர் டிரம்ப்பும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

செப்டம்பர் 24 ம் தேதி பிற்பகல் ஐ.நா.,வில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'தலைமைத்துவ விஷயங்கள்: காந்தியின் சமகால பொருத்தமும் (Leadership matters: Relevance of Gandhi in contemporary times) என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் இணைந்து கொரிய குடியரசு அதிபர், சிங்கப்பூர் பிரதமர், நியூசிலாந்து பிரதமர், வங்கதேச பிரதமர், ஜமைக்கா பிரதமர், ஐ.நா.பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் நியூயார்க்கில் ஐ.நா. தலைமையகத்தின் மேல்தளத்தில் காந்தி சோலார் பார்க் நிறுவுவது உள்ளிட்ட 3 திட்டங்கள் துவக்கப்பட உள்ளது. பில்கேட்சின் 'உலகளாவிய கோல்கீப்பர்' ( Global Goalkeeper) அமைப்பின் சார்பில் பிரதமர் மோடிக்கு, தூய்மை இந்தியா திட்டத்திற்காக விருது வழங்கப்பட உள்ளது.

2014 ம் ஆண்டு ஐ.நா., உயர்மட்டக் குழு கூட்டத்திற்கு பிறகு செப்டம்பர் 27 ம் தேதியன்று பிரதமர் மோடி முதல் முறையாக ஐ.நா., பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது டிரம்ப் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்களை மோடி சந்திக்க உள்ளார் என கூறினார்.

120 நாடுகளிலிருந்து சில இறக்குமதிகளுக்கு பூஜ்ஜிய கட்டண நுழைவுக்கு அனுமதித்த பொதுமயமாக்கப்பட்ட முன்னுரிமை முறை திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகளில் இந்தியா  ஒன்றாகும்.

இந்நிலையில் வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே  கூறும் போது, 

பொதுவான முறைமை விருப்பத்தேர்வுகள் ஒருதலைப்பட்ச முடிவாகும். இது சில நிபந்தனைகளின் அடிப்படையில் மற்ற நாடுகளுக்கு வழங்கப்படுகிறது. நாங்கள் வளரும் நாடு, அந்த அளவுகோல்களை நாங்கள் பூர்த்தி செய்கிறோம். ஜூன் மாதத்தில் அமெரிக்கா நீக்கிய வர்த்தக சலுகைகளுக்கான அளவுகோல்களை இந்தியா பூர்த்தி செய்கிறது  என கூறினார்.

Next Story