2 மாநில சட்டமன்ற தேர்தல் : உட்கட்சி பிரச்சினையால் தவிக்கும் காங்கிரஸ் !


2 மாநில சட்டமன்ற தேர்தல் : உட்கட்சி பிரச்சினையால் தவிக்கும் காங்கிரஸ் !
x
தினத்தந்தி 4 Oct 2019 2:16 AM GMT (Updated: 4 Oct 2019 2:23 AM GMT)

அரியானா, மராட்டிய மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

அரியானா மற்றும் மராட்டிய சட்ட மன்றத்துக்கு வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில்,  ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் பலப்பரிட்சை நடத்துகின்றன.

இரு மாநில தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில்,  காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் சிலர், அக்கட்சி மீது அதிருப்தி வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.   

மராட்டிய  காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம், தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க மாட்டேன் என்று டுவிட் செய்துள்ளார். அரியானாவை பொருத்தவரையில் கட்சியின் மூத்த தலைவர் அசோக் தன்வார் கட்சியின் அனைத்து மட்ட பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்திருக்கிறார். 

மாநில அரசியல் விவகாரம் தொடர்பாக சோனியாவிடம் பல்வேறு புகார்களை அளித்ததாகவும், இதனை அவர் பொருட்படுத்தவில்லை என்றும் தன்வார் குற்றம் சாட்டியுள்ளார். பணம் பெற்றுக்கொண்டு அரியானா மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சீட்டுகளை விற்பதாக தன்வார் புகார் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக சோனா மாநிலங்களவை தொகுதி ரூ. 5 கோடிக்கு விலை போயுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

Next Story