காற்றின் தரத்தை மேம்படுத்த பட்டாசு வெடிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் - மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்


காற்றின் தரத்தை மேம்படுத்த பட்டாசு வெடிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் - மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்
x
தினத்தந்தி 7 Oct 2019 9:23 PM IST (Updated: 7 Oct 2019 9:23 PM IST)
t-max-icont-min-icon

காற்றின் தரத்தை மேம்படுத்த பட்டாசு வெடிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்  செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

பண்டிகை காலங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த பட்டாசு வெடிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும், பட்டாசு வெடிக்கும் பட்சத்தில், பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும். 

தலைநகரில் காற்று மாசு அதிகரிப்பதற்கு, வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை தான் முக்கிய காரணம்.  காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் டெல்லியில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் பி.எஸ்.6 புகை உமிழ்வு விதிகளுக்கு உட்பட்ட வாகனங்கள் பயன்பாட்டுக்கு வரும். 

பயன்பாட்டுக்கு வந்த பின்னர் காற்று மாசு குறையும். 2006-ம் ஆண்டு முதல் டெல்லியில் காற்றின் தரம் வேகமாக மோசமடைந்து வருகிறது.

காற்று மாசினை அளவிட அமைக்கப்படும் கண்காணிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story