அவதூறு வழக்குகள் விசாரணை: ராகுல் காந்தி 2 கோர்ட்டுகளில் இன்றும், நாளையும் ஆஜர்


அவதூறு வழக்குகள் விசாரணை: ராகுல் காந்தி 2 கோர்ட்டுகளில் இன்றும், நாளையும் ஆஜர்
x
தினத்தந்தி 10 Oct 2019 4:00 AM IST (Updated: 10 Oct 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

அவதூறு வழக்குகள் விசாரணை தொடர்பாக, ராகுல் காந்தி 2 கோர்ட்டுகளில் இன்றும், நாளையும் ஆஜராக உள்ளார்.

ஆமதாபாத்,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, ‘‘அனைத்து மோடிகளும் திருடர்கள்’’ என்று பேசினார்.

இதுதொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் அவர் மீது பா.ஜனதா எம்.எல்.ஏ. புர்னே‌‌ஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்காக, ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) அந்த கோர்ட்டில் ஆஜராகிறார்.

இதுபோல், அமித்‌ஷாவை ‘‘கொலை குற்றம் சாட்டப்பட்டவர்’’ என்று பேசியதற்காக, ராகுல் காந்தி மீது குஜராத் மாநிலம் ஆமதாபாத் கோர்ட்டில் பா.ஜனதா கவுன்சிலர் தொடர்ந்த மற்றொரு அவதூறு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக, நாளை ராகுல் கோர்ட்டில் ஆஜராகிறார். இத்தகவல்களை மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சதாவ் தெரிவித்தார்.

Next Story