மேற்கு வங்காளத்தில் எந்தவொரு தடுப்பு முகாமையும் அமைக்க மாட்டோம் - மம்தா பானர்ஜி


மேற்கு வங்காளத்தில் எந்தவொரு தடுப்பு முகாமையும் அமைக்க மாட்டோம் - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 23 Oct 2019 11:00 AM IST (Updated: 23 Oct 2019 11:00 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் எந்தவொரு தடுப்பு முகாமையும் அமைப்பதற்கான கேள்வி எழவில்லை என முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

கொல்கத்தா,

அசாம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் சட்டவிரோத வெளிநாட்டினருக்கான தடுப்புக்காவல் முகாம்கள் இருப்பது போல்  மேற்கு வங்காளத்தில் அமைக்கப்படாது என மாநில முதல்வர்  மம்தா பானர்ஜி கூறினார். 

சிலிகுரிக்கு அருகிலுள்ள  உத்தர கன்யாவில் நடந்த ஒரு  கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-

எங்கள் மாநிலத்தில் எந்தவொரு குடிமக்களின் தேசிய பதிவு (என்.ஆர்.சி) பயிற்சியை மேற்கொள்ள எந்த திட்டமும் இல்லை என்று அனைத்து அரசு அதிகாரிகளின் முன்னிலையிலும் நான் இதை பொறுப்போடு  சொல்கிறேன். அதுபோல்  எந்தவொரு தடுப்பு முகாமையும் அமைப்பதற்கான கேள்வியும் எழவில்லை. நாம் அதைக் கட்டினால் மட்டுமே அது வர முடியும் என கூறினார்.

Next Story