கழிவறை இல்லாத 20 குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தம்


கழிவறை இல்லாத 20 குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தம்
x
தினத்தந்தி 1 Nov 2019 8:36 PM GMT (Updated: 1 Nov 2019 8:36 PM GMT)

கழிவறை இல்லாத 20 குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் கவுதமி என்ற கிராமம் உள்ளது. பஞ்சாயத்து சார்பில் அந்த கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த 11 நாட்களில், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்திய 20 குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. பஞ்சாயத்து கூட்டத்தில் எடுத்த முடிவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்த கஞ்சம் மாவட்ட கலெக்டர் விஜய் அம்ருதா கூறுகையில், “மத்திய, மாநில அரசுகளின் சட்ட விதிப்படி ஒருவருக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதை எந்த ஒரு காரணத்தினாலும் தடை செய்ய முடியாது. அதே நேரத்தில் திறந்த வெளியில், அதிலும் குறிப்பாக சாலை ஓரங்களை கழிப்பிடமாக பயன்படுத்தியவர்களுக்கு 1 மாதத்திற்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதை நிறுத்தி வைக்கலாம். பொதுமக்கள் கழிவறைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது” என்றார்.


Next Story