பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 65 கி.மீ தூரம் ஓடிய காவல் உதவி ஆய்வாளர்!

உத்தர பிரதேசத்தில் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 65 கி.மீ தூரம் வரை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் பித்தோலியில் உள்ள காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக விஜய் பிரதாப் என்பவர் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் பணிபுரிந்து வரும் காவல் நிலையத்தில் இருந்து வேறு ஒரு காவல் நிலையத்திற்கு அவர் திடீரென மாற்றப்பட்டார். பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காவல் உதவி ஆய்வாளர் விஜய் பிரதாப் சுமார் 65 கிலோ மீட்டர் தூரம் ஓடினார்.
முதலில் பணியாற்றிய காவல் நிலையத்தில் இருந்து, புதிதாக பணியிடமாற்றம் செய்யப்பட்ட காவல் நிலையத்திற்கு ஓடியே சென்றார். உயரதிகாரிகள் சார்வாதிகார போக்கை சுட்டிக்காட்டும் வகையில், இவ்வாறு செயல்பட்டதாக விஜய் பிரதாப் என்ற அந்த காவல் உதவி ஆய்வாளர் கூறினார்.
எதற்கு நீங்கள் இவ்வளவு தூரம் ஓடி வந்தீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த விஜய் பிரதாப், நீங்கள் இதனை எனது கோபம் அல்லது அதிருப்தி என்று அழைக்கலாம், ஆனால் நான் ஓடி பித்தோலிக்குச் செல்வேன் என்றார்.
நீண்டதூரம் ஓடியதால் களைப்படைந்த அவர் மயக்கம் அடைந்தார். இதனால் அவர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Related Tags :
Next Story