106 நாட்களுக்கு பின் சுதந்திர காற்றை சுவாசிப்பதில் மகிழ்ச்சி : ப.சிதம்பரம்
106 நாட்களுக்கு பின் சுதந்திர காற்றை சுவாசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று ஜாமீன் வழங்கியது. தனிக்கோர்ட்டு நீதிபதி முன்பு ரூ.2 லட்சம் சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனும் வழங்கி அவர் ஜாமீனில் விடுதலை ஆகலாம் என்றும் ப.சிதம்பரம் தனிக்கோர்ட்டின் அனுமதி இன்றி வெளிநாடு செல்லக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, ப.சிதம்பரம் 105 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தார். திகார் சிறையில் இருந்து வெளிவந்த சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ப.சிதம்பரம், “நான் நாளை பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறேன். 106 நாட்களுக்கு பிறகு சுதந்திர காற்றை சுவாசிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
Related Tags :
Next Story