விக்ரமாதித்யா போர்க்கப்பலில் தேஜாஸ் விமானத்தை இறக்கி சாதனை

விக்ரமாதித்யா போர்க்கப்பலில் தேஜாஸ் விமானத்தை இறக்கி சாதனை நிகழ்த்தப்பட்டது.
புதுடெல்லி,
இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானம், தேஜாஸ். இந்த விமானங்கள் தற்போது விமானப்படையில் இணைக்கப்பட்டு உள்ள நிலையில், கடற்படையில் பயன்படுத்தப்படும் தேஜாஸ் விமானங்களை டி.ஆர்.டி.ஓ. தற்போது தயாரித்து வருகிறது.
இந்த விமானங்கள் தற்போது பல்வேறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கடற்கரை பகுதிகளில் பல்வேறு சோதனைகளை இந்த விமானங்கள் முடித்துள்ளன. இதைத்தொடர்ந்து ஆழ்கடலில் போர் விமானத்தில் தரையிறக்கி சோதிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானந்தாங்கி போர்க்கப்பலில் நேற்று தேஜாஸ் விமானத்தை இறக்கி சோதிக்கப்பட்டது. இதில் போர்க்கப்பலில் தேஜாஸ் விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது. இது கடற்படை அதிகாரிகள் மற்றும் டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்து உள்ளது.
இந்த சாதனை தொடர்பாக டி.ஆர்.டி.ஓ. மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது ஒரு மிகப்பெரும் நிகழ்வு என தனது டுவிட்டர் தளத்தில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானத்தை போர்க்கப்பலில் இறக்கி சாதனை படைத்திருப்பதன் மூலம், மிகப்பெரும் மைல்கல் ஒன்றை இந்திய பாதுகாப்பு படை எட்டியுள்ளதாக பாதுகாப்பு வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

Related Tags :
Next Story