குடியுரிமை திருத்த சட்டம்: ஐநா மனித உரிமைகள் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளது.
புதுடெல்லி
பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன.
இந்த சட்டத்துக்கு எதிராக முதலில் வடகிழக்கு மாநிலங்களில் வெடித்த போராட்டம், பின்னர் மேற்கு வங்காளம், டெல்லி, சென்னை என பிற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக பெரும் வன்முறை நடந்து வந்தது. தற்போது தான் படிப்படியாக அமைதி நிலைக்கு திரும்பி உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில்
19-வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட 82 நாட்களில், அதுதொடர்பான பல்வேறு சம்பவங்களில் 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாடுமுழுவதும் வெடித்த வன்முறைகளில் அசாமில் 6 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 19 பேரும், கர்நாடகத்தில் 2 பேரும், டெல்லி கலவரங்களில் 48 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே, குடியுரிமை சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்னும் அறிவிக்கை செய்யவில்லை. விதிகள் வகுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள உள்துறை அமைச்சக வட்டாரங்கள், எப்போது அறிவிக்கை செய்யப்படும் என்பதற்கான காலக்கெடு எதையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. அதில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story