கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.446½ கோடி


கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.446½ கோடி
x
தினத்தந்தி 5 March 2020 2:29 AM IST (Updated: 5 March 2020 2:29 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்காக ரூ.446½ கோடி செலவு செய்யப்பட்டதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, மத்திய வெளியுறவு விவகாரத்துறை மந்திரி முரளதரன் அளித்த பதிலில், கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்துக்காக ரூ.446.52 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் விமான செலவுகளும் அடங்கும் என்று தெரிவித்தார்.

அவர் அளித்த தகவலில், 2015-16-ம் ஆண்டில் ரூ.121.85 கோடியும், 2016-17-ல் ரூ.78.52 கோடியும், 2017-18-ம் ஆண்டில் ரூ.99.90 கோடியும், 2018-19-ம் ஆண்டில் ரூ.100.02 கோடியும், 2019-20-ம் ஆண்டில் ரூ.46.23 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

Next Story