கொரோனா எதிரொலி - பேடிஎம் அலுவலகம் மூடல்

கொரோனா எதிரொலியால் குர்கான், நொய்டாவில் உள்ள பேடிஎம் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
அரியானா மாநிலம் குர்கானில் உள்ள ‘பேடிஎம்’ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியானது. தற்போது பாதிக்கப்பட்டவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் சமீபத்தில் விடுமுறை எடுத்துக்கொண்டு இத்தாலி சென்று வந்தார். அவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானதால் அந்த நிறுவனம் தனது ஊழியர்கள் அனைவரையும் அடுத்த 2 நாட்களுக்கு வீடுகளில் இருந்தே பணிபுரியும்படியும், அனைவரும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் கொரோனா எதிரொலியால் குர்கான், நொய்டாவில் உள்ள பேடிஎம் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் இருந்து வந்த ஒரு பேடிஎம் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story