இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்வு


இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்வு
x
தினத்தந்தி 10 March 2020 4:09 PM IST (Updated: 10 March 2020 4:23 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.

புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொடர்ந்து 104 நாடுகளில் பரவியுள்ளது.  சீனாவில் வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,136 ஆக உள்ளது.  உலக அளவில் இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 28 ஆக உள்ளது.  இதேபோன்று உலக அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 549 ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை நேற்று வரை 45 ஆக உயர்ந்திருந்தது.  தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்து இன்று 56 ஆக உள்ளது.

இந்தியாவில் வைரசால் பாதிப்படைந்தோரின் விவரம்

கேரளா - 15, கர்நாடகா - 4, உத்தர பிரதேசம் - 7, டெல்லி - 5, லடாக் - 2, புனே - 2, தமிழ்நாடு - 1, தெலுங்கானா - 1, ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசம் - 1, பஞ்சாப் - 1, இத்தாலி சுற்றுலா பயணிகள் - 16 மற்றும் சுற்றுலா வழிகாட்டி - 1.

கேரளாவின் கொச்சி நகரில் மலையாள திரையுலகின் பல்வேறு அமைப்புகள் இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில், நாளை முதல் வருகிற 31ந்தேதி வரை திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதேபோன்று, கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 14ந்தேதி முதல் 18ந்தேதி வரையில் நடைபெறவுள்ள மாத பூஜைக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என தேவசம் போர்டு கேட்டு கொண்டுள்ளது.

Next Story