மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.64.50 குறைந்தது

மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.64.50 குறைந்துள்ளது.
புதுடெல்லி,
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு சமையல் கியாஸ் சிலிண்டர்களை மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு தலா 12 சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான மானியம் நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்தை பொறுத்து, ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி, வீட்டு உபயோகம் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
இந்த ஆண்டின் தொடக்கமான ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கியாஸ் சிலிண்டர் விலை அதிகரித்தது. கடந்த (மார்ச்)மாதம் கியாஸ் சிலிண்டர் விலை குறைந்தது. இதனால் சென்னையில் ரூ.881-க்கு விற்பனையான கியாஸ் சிலிண்டர் ரூ.55 குறைந்து ரூ.826-க்கு விற்பனையானது.இந்தநிலையில் தொடர்ந்து 2-வது மாதமாக மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை குறைந்தது.
அதன்படி சென்னையில் வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.64.50 குறைந்து ரூ.761.50-க்கு விற்பனை செய்யப் படுகிறது.
Related Tags :
Next Story