இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2,293; மிகப்பெரிய உச்சத்தை தொட்டது


இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2,293; மிகப்பெரிய உச்சத்தை தொட்டது
x
தினத்தந்தி 2 May 2020 9:20 AM IST (Updated: 2 May 2020 9:20 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2,293 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஏற்பட்டு மிகப்பெரிய உச்சத்தை தொட்டு உள்ளது.

புதுடெல்லி 

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2,293 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஏற்பட்டு  மிகப்பெரிய உச்சத்தை தொட்டு உள்ளது. மொத்த பாதிப்புகள் 37 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 71 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். 1061 பேர் குணமடைந்துள்ளனர்.

மொத்த பாதிப்பு - 37,336 
சிகிச்சை பெறுபவர்கள் - 26,167
உயிரிழப்பு - 1,218
குணமடைந்தவர்கள் - 9,950

மராட்டியத்தில்  11,506 பேருக்கு கொரோனா; 1,879 பேர் குணமடைந்த நிலையில் 485 பேர் உயிரிழந்து உள்ளனர்.

குஜராத் - 4,721
டெல்லி - 3,738
மத்திய பிரதேசம் - 2,719
ராஜஸ்தான் - 2,666
உத்தரப்பிரதேசம் - 2,328



Next Story