தேசிய செய்திகள்

சில வழிகாட்டுதல்களுடன் பொது போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும்- நிதின் கட்காரி + "||" + Public Transport May Open Soon With Some Guidelines, Says Nitin Gadkari

சில வழிகாட்டுதல்களுடன் பொது போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும்- நிதின் கட்காரி

சில வழிகாட்டுதல்களுடன் பொது போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும்- நிதின் கட்காரி
சில வழிகாட்டுதல்களுடன் பொது போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறி உள்ளார்.
புதுடெல்லி

கொரோனா வைரஸுக்கு எதிரான ஊரடங்கு மார்ச் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பொது போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பசுமை மண்டலங்களில், அரசாங்கம் ஏற்கனவே சில கட்டுப்பாடுகளிலிருந்து நிவாரணம் வழங்கியுள்ளது. பிரத்தியேக விஷயங்களைத் தீர்மானித்த மாநில அரசுகள், சில தொழில்துறை துறைகளை இயக்க அனுமதித்தன மற்றும் முழுமையாக கடைகளை திறக்க அனுமதித்து உள்ளன.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று சில வழிகாட்டுதல்களுடன் விரைவில் போக்குவரத்துக்கு தொடங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்,

பஸ் மற்றும் கார் ஆபரேட்டர்கள் கூட்டமைப்பின் வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சியில் கட்காரி சில வழிகாட்டுதல்களுடன் பொது போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார்.

எவ்வாறாயினும், பேருந்துகள் மற்றும் கார்களை இயக்கும் போது சமூக தூரத்தை பராமரிப்பது மற்றும் கை கழுவுதல், சுத்திகரிப்பு மற்றும் முககவசம் போன்ற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுவது குறித்த எச்சரிக்கை பின்பற்றப்படும் எனதெரிவித்தார்.

ஆனால் போக்குவரத்து தொடங்கும் தேதி அறிவிக்கப்படவில்லை.

கொரோனா தொற்றுநோயின் இந்த கடினமான நாட்களில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மேலதிக நேரம் பணியாற்றி வரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தான் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கட்கரி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு பலியான உரிமையாளருக்கு மருத்துவமனைவாசலில் 3 மாதங்கள் காத்திருந்த நாய்
உரிமையாளர் கொரோனாவுக்கு பலியானது தெரியாமல் மருத்துவமனைவாசலில் 3 மாதங்களாக காத்திருந்த விசுவாசமான நாய்
2. கொரோனாவுக்கு எதிரான போர்: இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவுகளையும் இந்தியா வழங்கும்- பிரதமர் மோடி
கொரோனாவுக்கு எதிரான போரில் இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவு மற்றும் உதவிகளையும் இந்தியா வழங்கும் என பிரதமர் மோடி உறுதியளித்து உள்ளார்.
3. கொடிய கொரோனா சீனாவிலிருந்து தான் வந்தது, அதை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்- டொனால்டு டிரம்ப்
கொடிய கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து தான் வந்தது, அமெரிக்கா அதை எளிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
4. கொரோனா பாதிப்பு சென்னை ராயபுரம்-கோடம்பாக்கத்தில் ஆயிரத்தை கடந்தது.
சென்னை ராயபுரம்- கோடம்பாக்கம் மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை கடந்தது.
5. அறிகுறியற்ற கொரோனா வைரஸ் நோயாளிகளை கண்டறிய மோப்ப நாய்களுக்கு பயிற்சி
அறிகுறியற்ற கொரோனா வைரஸ் நோயாளிகளை கண்டறிய மோப்ப நாய்களுக்கு பயிற்சி ஒரு மணி நேரத்திற்கு 250 பேரை பரிசோதனை செய்யும்.