அமெரிக்கா இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிக்கும்;பிரதமர் மோடிக்கு துணை நிற்போம்-டொனால்டு டிரம்ப்


அமெரிக்கா இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிக்கும்;பிரதமர் மோடிக்கு துணை நிற்போம்-டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 16 May 2020 8:20 AM IST (Updated: 16 May 2020 8:20 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்கா இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிக்கும், பிரதமர் மோடிக்கு துணை நிற்போம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.

புதுடெல்லி: 

கொரோனாவுக்கு  எதிரான போராட்டத்தில் தனது நாடு இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை டுவீட் செய்துள்ளார். "இந்த தொற்றுநோய்களின் போது நாங்கள் இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு துணை நிற்கிறோம்" என்று அவர் கூறி உள்ளார்.

கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது.  ஒன்றாக இணைந்து நாம் கண்ணுக்கு தெரியாத எதிரியை வெல்வோம்! என கூறி உள்ளார்.


Next Story