ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட்டை அணுகுமாறு தமிழக போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தி.மு.க. அமைப்பு செயலாளரும், மேல்சபை எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதியை கடந்த மே மாதம் 23-ந்தேதி போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி,
தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறாக பேசியதாக தி.மு.க. அமைப்பு செயலாளரும், மேல்சபை எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதியை கடந்த மே மாதம் 23-ந்தேதி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி செல்வக்குமார் மே 31-ந்தேதி வரை ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய மறுத்துவிட்டார். சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், கிருஷ்ணமுராரி, ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனுவை வாபஸ் பெற்று, மீண்டும் ஐகோர்ட்டை அணுகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story