நிர்மலா சீதாராமன் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சர்ச்சை பேச்சு பா.ஜனதா கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து, மேற்கு வங்காள மாநிலம் பங்குரா என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொல்கத்தா,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து, மேற்கு வங்காள மாநிலம் பங்குரா என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சி எம்.பி. கல்யாண் பானர்ஜி பங்கேற்று பேசியதாவது:-
விஷப்பாம்பு, மனிதர்களை கொல்வது போல், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனால், நாட்டு மக்கள் ஒருவர்பின் ஒருவராக பலியாகி வருகின்றனர். அந்த அளவுக்கு அவர் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டார்.
உலகிலேயே மிக மோசமான நிதி மந்திரி அவர்தான். அவர் பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவரது பேச்சுக்கு மாநில பா.ஜனதா தலைவர் திலீப் கோஷ் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தனது கட்சி மீதான பிடியை நழுவ விட்டுவிட்டதாக தோன்றுகிறது. அதனால், அக்கட்சி தலைவர்கள் முட்டாள்தனமாக பேசி வருகிறார்கள். கட்சியில் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம்வரை ஊழல் நிலவுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story