தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை + "||" + Vikas Dubey succumbed to serious injuries after encounter, no official confirmation yet: Sources

உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை
உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
லக்னோ,

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த விகாஸ் துபே என்பவனை கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக கடந்த 2-ந்தேதி இரவில் அவனது கிராமமான பிக்ருவுக்கு போலீசார் சென்றனர். அப்போது தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு விகாஸ் துபே தப்பினான்.

இந்த பரபரப்பு சம்பவத்தில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க 25-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர்.

இதில் உடனடி பலனாக துபேயின் 2 கூட்டாளிகள் 3-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைப்போல அவனது வலது கரமாக விளங்கிய தயாசங்கர், போலீசார் வருகை பற்றி துபேவுக்கு துப்பு கொடுத்த போலீஸ்காரர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே போலீசிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தான்.

இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் வைத்து நேற்று அந்த மாநில போலீசார் விகாஸ் துபேயை அதிரடியாக கைது செய்தனர். அங்குள்ள புகழ்பெற்ற மகாகாளி கோவிலுக்கு தனது கூட்டாளிகள் இருவருடன் வந்தபோது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விகாஸ் துபேயை பிடித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட விகாஸ் துபே, இன்று காலை கான்பூருக்கு அழைத்து வரப்பட்டான். கான்பூருக்கு காரில் அழைத்து வந்த போது, பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தை பயன்படுத்தி, விகாஸ் துபே தப்ப முயன்றதாகவும் அப்போது நடைபெற்ற என்கவுண்டரில் விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்டதாகவும்  போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூரு வன்முறை; உ.பி அரசைப் போல இழப்பீடு பெறப்படும்-கர்நாடக மந்திரி தகவல்
உ.பி அரசை போல குற்றவாளிகளிடமிருந்து சேதமடைந்த சொத்துக்களுக்கான பணத்தை பெறுவோம் என்று கர்நாடக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2. கொரோனா தொற்று பாதிப்பால் உத்தர பிரதேசத்தில் மந்திரி உயிரிழப்பு
கொரோனா தொற்று பாதிப்பால் உத்தர பிரதேசத்தில் கேபினட் மந்திரி உயிரிழந்தார்.
3. ’விகாஸ் துபே’ போலி என்கவுண்டரில் கொல்லப்படவில்லை; உச்ச நீதிமன்றத்தில் உ.பி போலீஸ் பிரமாணப்பத்திரம் தாக்கல்
விகாஸ் துபே போலி என்கவுண்டரில் கொல்லப்படவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச போலீஸ் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
4. விகாஸ் துபேயின் குடும்பத்தினர் மீது நிதி மோசடி வழக்கு: அமலாக்கத்துறை திட்டம்
உத்தரபிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபேயின் குடும்பத்தினர் மீது நிதி மோசடி வழக்கு தொடர அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
5. விகாஸ் துபே செய்தது தவறு, இந்த மரணத்திற்கு தகுதியானவரே: மனைவி ரிச்சா துபே கருத்து
விகாஸ் துபே செய்தது தவறு, இத்தகைய நிலைக்கு அவர் தகுதியானவர்தான் என்று மனைவி ரிச்சா துபே தெரிவித்தார்.