தெலுங்கானாவில் ஆட்டோவில் எடுத்துச்செல்லப்பட்ட கொரோனா பாதித்தவரின் உடல்


தெலுங்கானாவில் ஆட்டோவில் எடுத்துச்செல்லப்பட்ட கொரோனா பாதித்தவரின் உடல்
x
தினத்தந்தி 12 July 2020 8:44 AM IST (Updated: 12 July 2020 8:44 AM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் கொரோனாவால் இறந்த நபரின் உடலை ஆட்டோவில் எடுத்துச்செல்லப்பட்ட அவலம் நடந்துள்ளது.

ஐதராபாத்,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

தெலுங்கானாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உடல் ஆட்டோவில் எடுத்து செல்லப்பட்டது.

கொரோனாவால் உயிரிழந்த நோயாளியின் உடல் அடக்கம் செய்வதற்காக ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இது குறித்து மருத்துவமனையின் டீன் டாக்டர் என் ராவ் கூறுகையில், மருத்துவமனையில் பணிபுரியும் நபர் கொரோனாவால் உயிரிழந்த உறவினர் ஆவார். அவர் எங்களிடம் உடலைக் தரும்படி கேட்டார். ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தேன். அதற்கு அவர் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் கொரோனா பாதித்தவரின் உடலை ஆட்டோவில் ஏற்றி சென்று விட்டார். இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.


Next Story