தாராவியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 36 பேருக்கு தொற்று
மும்பை தாராவி பகுதியில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவி பகுதியில் அரசின் தீவிர முயற்சியால் கொரோனா பரவல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த ஒரு மாதமாக இங்கு பெரும்பாலான நாட்கள் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் தான் இருந்தது. தாராவியில் நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை உலக சுகாதார அமைப்பு பாராட்டி இருந்தது.
இந்தநிலையில், கடந்த சில தினங்களாக அங்கு படிப்படியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கி வருகிகறது. தாராவியில் இன்று ஒருநாளில் மட்டும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாராவி பகுதியில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2480 ஆக உள்ளது. 2,088 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், 143 பேர் கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story