மர்ம நபர்களால் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பத்திரிகையாளர் மரணம்; உ.பி. அரசு ரூ.10 லட்சம் அறிவிப்பு

டெல்லி அருகே மர்ம நபர்களால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுடெல்லி
காசியபாத் அருகே கடந்த 20 ம் தேதி இரு மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற விக்ரம் ஜோஷி என்ற பத்திரிகையாளர் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த விக்ரம் ஜோஷி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி உத்தர பிரசேதம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். உள்ளூர் இந்தி பத்திரிகையில் வேலைபார்த்து வந்தார். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விக்ரம் ஜோஷி தனது மருமகளை ஒரு கும்பல் துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகார் அளித்த நான்கு நாட்களுக்குப்பிறகு விக்ரம் ஜோஷி சுடப்பட்டார். பத்திரிக்கையாளர் சுடப்பட்ட இடத்தில் இருந்து சிசிடிவி கேமராவில் இந்த தாக்குதல் காட்சிகள் பதிவாகியுள்ளது.
மரணமடைந்த பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷியின் குடும்பத்திற்கு ரூ .10 லட்சம் பத்திரிகையாளர் மனைவிக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story