திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் ரத்து


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் ரத்து
x
தினத்தந்தி 6 Sept 2020 10:41 AM IST (Updated: 6 Sept 2020 10:41 AM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி 3,000 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வரும் 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இலவச தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 

புரட்டாசி மாதத்தில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் நாள்தோறும் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனிடையே, முன்னறிவிப்பு இன்றி, இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டிருப்பது, பக்தர்களிடையே அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது.

Next Story