தேசிய செய்திகள்

புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கான கட்டுமான ஒப்பந்தம் டாடா நிறுவனத்திடம் ஒப்படைப்பு + "||" + Construction contract for the new Parliament complex handed over to Tata

புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கான கட்டுமான ஒப்பந்தம் டாடா நிறுவனத்திடம் ஒப்படைப்பு

புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கான கட்டுமான ஒப்பந்தம் டாடா நிறுவனத்திடம் ஒப்படைப்பு
புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கான கட்டுமான ஒப்பந்தம் டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான, புதிய நாடாளுமன்ற வளாகம் மற்றும் ஒருங்கிணைந்த மத்திய தலைமை செயலகம் கட்ட ஓப்பந்தப்புள்ளி கோரப்ப​ட்டது. இதற்கான திட்டச் செலவை 940 கோடி ரூபாய் வரை மத்திய பொதுப் பணித்துறை நிர்ணயித்து இருந்தது.


டாடா, எல்&டி உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்ற நிலையில் மிகக் குறைந்த அளவாக 861 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தப் புள்ளி கோரிய டாடா நிறுவனத்துக்கு, ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. எல்&டி நிறுவனம் 865 கோடி ரூபாய் கோரியிருந்தது.

21 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், பணியை தொடங்கும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நாட்டின் 75-வது சுதந்திர தினம் வரும் 2022 ஆம் ஆண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், 900 முதல் 1200 எம்.பி.க்கள் அமரும் வகையில் நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த மத்திய தலைமை செயலக பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.