மராட்டியத்தில் மேலும் 8,142 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரத்துறை தகவல்


மராட்டியத்தில்  மேலும் 8,142 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 21 Oct 2020 4:52 PM GMT (Updated: 2020-10-21T22:22:45+05:30)

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 180- பேர் உயிரிழந்தனர்.

மும்பை,

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தநிலையில் 3½ மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் மாநிலத்தில் பாதிப்பு அதிரடியாக குறைந்தது. அன்று 5 ஆயிரத்து 984 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டது. அதாவது 3½ மாதங்களுக்கு பிறகு தொற்று பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது. 

இந்த நிலையில், மராட்டியத்தில்  நேற்றும் இன்றும் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,142- ஆக உள்ளது. அதேபோல், இன்று ஒரே நாளில் 180- பேர் உயிரிழந்துள்ளனர். 

இதன் மூலம் மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 633- ஆக உயர்ந்துள்ளது. மராட்டியத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மாநில தலைநகர் மும்பையில் இன்று 1,609- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Next Story