ரஷியாவின் ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் பரிசோதனை மேலும் ஒரு நிறுவனம் கைகோர்ப்பு

ரஷியாவால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி, இந்தியாவில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
மும்பை,
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உலக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், ரஷியா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்து இருப்பதாக அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி அறிவித்து உலகை பரபரப்பில் ஆழ்த்தினார்.
இந்தநிலையில், ரஷிய பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் அறிவியல் ஆராச்சி நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ள இந்த தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக்-5’ என பெயரிடப்பட்டுள்ளது.
ரஷியாவால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி, இந்தியாவில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த பரிசோதனை பணியில், மருத்துவ உலகில் முன்னணி நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் கைகோர்த்துள்ளது.
இந்தியாவில் நடக்கும் ஸ்புட்னிக்-5 மருத்துவ பரிசோதனைகள் குறித்து அந்த நிறுவனம் ஆலோசனை வழங்கும். இதற்காக மத்திய உயிரி தொழில்நுட்பத்துறையுடனும், உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலுடனும் (பிராக்) இணைந்து செயல்படும்.
Related Tags :
Next Story