காஷ்மீர் கவர்னரின் ஆலோசகர் ராஜினாமா மாநில தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்


காஷ்மீர் கவர்னரின் ஆலோசகர் ராஜினாமா மாநில தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார்
x
தினத்தந்தி 30 Oct 2020 11:16 PM GMT (Updated: 30 Oct 2020 11:16 PM GMT)

காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னரின் ஆலோசகர்களில் ஒருவரான கே.கே.சர்மா நேற்று ராஜினாமா செய்தார்.

ஸ்ரீநகர், 

காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னரின் ஆலோசகர்களில் ஒருவரான கே.கே.சர்மா நேற்று ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, காஷ்மீரின் தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இத்தகவலை காஷ்மீர் அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

கே.கே.சர்மா, 1983-ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். தனது 30 வருட அரசுப்பணியில் டெல்லி, கோவா மாநிலங்களின் தலைமை செயலாளர், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக செயலாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

Next Story