தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் மராட்டிய அரசு வலியுறுத்தல்


தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் மராட்டிய அரசு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Nov 2020 6:27 AM IST (Updated: 6 Nov 2020 6:27 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மராட்டிய அரசு வலியுறுத்தி உள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் தீபாவளி பண்டிகை வருகிற 13-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது அதிகளவு பட்டாசு வெடிக்கப்படுகிறது. இது காற்று மற்றும் ஒலி மாசை ஏற்படுத்துகிறது.

இது தீபாவளிக்கு பிறகும் பொதுமக்கள் நலன் மற்றும் விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசால் கொரோனா நோயாளிகள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள். இதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அதிகளவில் விளக்கு ஏற்றி தீபாவளியை கொண்டாடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story