சர்வதேச தரம் வாய்ந்த உள்நாட்டு நீர்வழி போக்குவரத்துக்கான முதல் நடவடிக்கை; பிரதமர் மோடி அறிவிப்பு


சர்வதேச தரம் வாய்ந்த உள்நாட்டு நீர்வழி போக்குவரத்துக்கான முதல் நடவடிக்கை; பிரதமர் மோடி அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Nov 2020 3:29 PM IST (Updated: 8 Nov 2020 3:29 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி கப்பல் போக்குவரத்து அமைச்சக பெயரை துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்து அறிவித்துள்ளார்.

பவ்நகர்,

குஜராத்தில் பவ்நகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோகா மற்றும் சூரத் நகருக்கு அருகே அமைந்த ஹசீரா ஆகிய நகரங்களுக்கு இடையே படகு போக்குவரத்து ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியே இன்று தொடங்கி வைத்து பேசினார்.  இந்நிகழ்ச்சியில் மாநில முதல் மந்திரி விஜய் ரூபானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கப்பல் துறை அமைச்சகத்தின் பெயர் இனி துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என அறிவித்துள்ளார்.

துறைமுகங்களை புனரமைக்கும் மோடி அரசின் முயற்சியின் ஒரு பகுதியாகவும் மற்றும் சர்வதேச தரத்துடனான உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து உருவாக்கத்திற்காகவும் இந்த பெயர் மாற்ற முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கப்பல் போக்குவரத்து அமைச்சகம் ஆனது, கப்பல் கட்டுமானம், கப்பல் புனரமைப்பு, முக்கிய துறைமுகங்கள், தேசிய நீர்வழி போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆகியவற்றை உள்ளடக்கிய கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக பிரிவுகளை கொண்டது.

அமைச்சகத்தின் பெயரை மத்திய அரசு மாற்றுவது என்பது புதிதல்ல.  மத்திய மனிதவளம் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரானது கடந்த ஜூலையில், புதிய கல்வி கொள்கை 2020ன் கீழ் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Next Story