அனைத்து குடியிருப்பு காலனிகளின் சாதிய பெயர்களை மாற்ற முடிவு; மராட்டிய அமைச்சரவை ஒப்புதல்
மராட்டியத்தில் சாதிக்கு பதில் சமூக சேவை ஆற்றியவர்களின் பெயர்களை அனைத்து குடியிருப்பு காலனிகளுக்கு மாற்ற அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் அந்தந்த பகுதியில் வாழ்ந்து வரும் குறிப்பிட்ட சமூகத்தின் உறுப்பினர்களது பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளது. வளர்ந்து வரும் மராட்டிய மாநிலத்தின் ஒரு பகுதியாக இதனை மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.
இதுபற்றி மராட்டிய முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், மகர்-வாடா, பவுத்-வாடா, மாங்க்-வாடா, தோர்-வாஸ்தி, பிராமன்-வாடா, மாலி-கல்லி ஆகிய பெயர்கள் பொது இடங்களுக்கு சூட்டப்பட்டு உள்ளன.
இதற்கு பதிலாக சமதா நகர், பீம் நகர், ஜோதி நகர், சாகு நகர் மற்றும் கிரந்தி நகர் என புதிய பெயர்கள் வழங்கப்படும்.
சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவை பேணப்பட இதுபோன்று நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என தெரிவித்து உள்ளது.
இதுபற்றி மராட்டிய அமைச்சரவையை சேர்ந்த மந்திரி அஸ்லாம் ஷேக் கூறும்பொழுது, ஆங்கிலேய ஆட்சி காலத்தில் மக்களை பிரித்து ஆள்வதற்காக இதுபோன்ற சாதி அடிப்படையிலான பெயர்கள் காலனிகளுக்கு சூட்டப்பட்டன.
அதனால், அவற்றுக்கு பதிலாக நாட்டுக்கு சேவையாற்றிய மக்களின் பெயர்கள் சூட்டப்படும் என கூறினார். இதன்படி, மராட்டியத்தில் அனைத்து குடியிருப்பு காலனிகளின் சாதிய அடிப்படையிலான பெயர்களை மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Related Tags :
Next Story