முதற்கட்டமாக ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய சுகாதாரத்துறை


Image courtesy : ndtv.com
x
Image courtesy : ndtv.com
தினத்தந்தி 5 Dec 2020 9:16 AM IST (Updated: 5 Dec 2020 9:16 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்ததும் முதற்கட்டமாக, ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என, மத்திய சுகாதார அமைச்சர் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.

புதுடெல்லி

பிரதமர் மோடி தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில்கொரோனா  தடுப்பூசி முதலில் பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த சுமார் ஒரு கோடி சுகாதார ஊழியர்களுக்கும்,( மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்) பின்னர் சுமார் இரண்டு கோடி முன்னணி வரிசை தொழிலாளர்களுக்கும் ( போலீஸ் , ஆயுதப்படை )  வழங்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம்  தனது விளக்கக்காட்சியில் தெரிவித்தது.

மூன்றாவது கட்டமாக, 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டது.

Next Story