குமராசாமி பொய்களுக்கு பெயர் போனவர் - சித்தராமையா குற்றச்சாட்டு
எச்.டி.குமாரசாமி தனது பொய்களுக்கு பெயர் போனவர் என்று சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன. முதல்-மந்திரியாக குமாரசாமி பதவி வகித்தார். ஆனால் குமாரசாமி மீதான அதிருப்தி காரணமாக கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து பா.ஜனதாவில் இணைந்தனர்.
இதனால் குமாரசாமி தலைமையில் நடந்த கூட்டணி அரசு கவிழ்ந்தது. தனது ஆட்சி கவிழ காங்கிரசார் தான் காரணம் என்று குமாரசாமி அடிக்கடி கூறி வருகிறார். ஆனால் இதற்கு காங்கிரசார் மறுப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து இருந்தால், நான் இன்னும் முதல்-மந்திரி பதவியில் நீடித்து இருப்பேன் என்றும் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மிகப்பெரிய தவறை செய்து விட்டேன் என்று குமாரசாமி தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,
அவருக்கு ஒரு போதும் நல்லெண்ணம் இருந்தது இல்லை. எச்.டி.குமாரசாமி தனது பொய்களுக்கு பெயர் போனவர். அவர் அரசியல் காரணங்களுக்காக பொய் சொல்கிறார். எங்களுக்கு 80 இடங்கள் இருந்தன. அவருக்கு 37 இடங்கள் இருந்தன, ஆனால் நாங்கள் அவரை ஒரு ஆண்டு & மூன்று மாதங்கள் முதல்வராக்கினோம். இதில் யாருக்கு நன்மை கிடைத்தது என்பதை இப்போது அவர் சொல்ல வேண்டும். அவர் வெஸ்ட் எண்ட் ஹோட்டலில் இருந்து அரசாங்கத்தை நடத்தி வந்தார் என்றார்.
Related Tags :
Next Story