லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.7 ஆக பதிவு


லடாக்கில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.7 ஆக பதிவு
x
தினத்தந்தி 7 March 2021 5:32 AM GMT (Updated: 7 March 2021 5:32 AM GMT)

லடாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.

லடாக்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் லடாக் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 3.7 ஆக பதிவாகி உள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.


Next Story