சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்


சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல்
x
தினத்தந்தி 4 April 2021 2:23 PM IST (Updated: 4 April 2021 2:23 PM IST)
t-max-icont-min-icon

சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா - பிஜாபூா் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனா். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்துள்ளனா். இந்த சண்டையில் 22 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிஜாப்பூர் எஸ்.பி  தெரிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்த 31 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நக்சலைட்டுகளுடனான துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. நக்சல்கள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்க முடியாது, தேசம் என்றும் நினைவில் கொள்ளும். என்று தெரிவித்துள்ளார்.

Next Story