ஆந்திராவில் சாலை விபத்து; 6 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் சாலை விபத்தில் கார் சிக்கி தீப்பிடித்து கொண்டதில் 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.
சித்தூர்,
ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் சந்திரகிரி பகுதியருகே புத்தளப்பட்டு-நாயுடுபேட்டை சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த கார் விபத்தில் சிக்கியது.
இதனை தொடர்ந்து காரில் இருந்து எரிபொருள் கசிந்து தீப்பற்றி கொண்டது. காருக்குள் 8 பேர் வரை இருந்துள்ளனர். இந்த திடீர் விபத்து மற்றும் தீப்பிடித்தது ஆகியவற்றால் உள்ளேயிருந்தவர்கள் மூச்சு திணறியும், அதிர்ச்சியிலும் தள்ளப்பட்டு இருந்தனர்.
இந்த சம்பவத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர். 3 பேர் ரூயியா மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இதனால் மொத்த உயிரிழப்பு 6 ஆக உயர்வடைந்து உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story