டெல்லியில் 3-வது அலையா? 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

டெல்லியில் கரோனா தொற்று அதிகரிப்பதால் மூன்றாவது அலை தொடருமா என்ற அச்சம் மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
புதுடெல்லி,
ஒமைக்ரான் உலகை அச்சுறுத்தி வருகிறது. ஒமைக்ரான் பரவலால் பல நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் தடம் பதித்த ஒமைக்ரான் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, டெல்லியில் கடந்த சில நாளாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளிக் கிழமை அன்று 69 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டியிருந்தது. மேலும், நேற்று முன்தினம் 86 ஆக உயர்ந்துள்ளது. 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு விகிதம் டெல்லியில் உயர்ந்துள்ளது. இதனால், மூன்றாவது அலை ஏற்படுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.
தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் மக்கள் அவசியமின்றி பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஒமைக்ரான் பரவினால் அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story